புதன், 20 நவம்பர், 2013

புகழ்


                       புகழின்  புகல்                 
                   
              ஆண்கள் புகழ் பெற்றால்

              சேர்ந்து பேசுவர்
               
               பெண்கள் புகழ் பெற்றால்
          
               சேர்த்து பேசுவர்

வியாழன், 24 அக்டோபர், 2013

மரணம்

மாலை தொடுப்பவனையும்
தப்பு அடிப்பவனையும்
மட்டை வெட்டுபவனையும்
பாடை கட்டுபவனையும்
சுடுகாட்டில் காத்திருந்து
சுட்டு எரிப்பவனையும்
மகிழ்விக்கும் மரணம்
மண்ணோடு மண்ணாகட்டும்

புதன், 9 அக்டோபர், 2013

தமிழச்சியின் கனவு

இரண்டே நாளில்
இணையதளப்பயிற்சி
இரண்டடி வெண்பாவாய்
கணினிதமிழ் பயிற்சி
கனவு நனவானதே!....